Connect with us

ஜூன் 30க்கு பின்னரும் சென்னையில் ஊரடங்கு நீடிப்பா? முதல்வர் விளக்கம்

செய்திகள்

ஜூன் 30க்கு பின்னரும் சென்னையில் ஊரடங்கு நீடிப்பா? முதல்வர் விளக்கம்

கொரோனா வைரஸ் அதிகம் பாதிக்கப்பட்ட சென்னை உள்பட 4 மாவட்டங்களில் ஜூன் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் ஜூன் 30ஆம் தேதிக்கு பின்னரும் சென்னையில் சென்னையில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுமா? என்பது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பழனிச்சாமி, ‘ஜூன் 30 க்கு பின்னரும் சென்னையில் முழு ஊரடங்கு நீடிக்கும் வாய்ப்பு இல்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் கொரோனா வைரஸ் ஒழியும் வரை சென்னை மக்கள் உள்பட அனைவரும் வீட்டை விட்டு வெளியே வராமல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்

முழு ஊரடங்கு உத்தரவு என்பது மக்களின் இம்சிக்க அல்ல என்றும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்றும் மக்களின் முழு ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே கொரோனா வைரஸை ஒழிக்க முடியும் என்றும் கூறியுள்ளார்

இது போன்ற பிரச்சினையை இதுவரை யாரும் சந்தித்ததில்லை என்பதால் மருத்துவ ஊழியர்கள் வழிகாட்டுதல்படி அரசு செயல்பட்டு வருவதாகவும் எனவே அரசு கொரோனாவை தடுக்க சரியான நடவடிக்கையை அரசு எடுக்கவில்லை என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை நியாயமற்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்

நம்முடைய மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் தீவிர முயற்சியால் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களை குணமாக்கும் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார் மேலும் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த அரசு பல்வேறு வழிகளில் முயற்சி செய்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்

Continue Reading
To Top