எனக்கு எண்ட் கார்டே இல்ல- சினிமா டயலாக்கை உண்மையில் பேசிய வடிவேலு

சில வருடங்களுக்கு முன் வெளிவந்த இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தில் வடிவேலு நல்லதொரு காமெடி வேடத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் காமெடி பல இடங்களில் ரீச் ஆகி இருந்தது.

சமீபத்தில் வடிவேலு நடிக்க இம்சை அரசன் படத்தின் இரண்டாம் பாகத்துக்குரிய பூஜை போடப்பட்டது. இப்படத்தின் பூஜை போடப்பட்ட பின் படத்தின் தயாரிப்பாளர் ஷங்கருக்கும் வடிவேலுவுக்கும் இடையே பனிப்போர் மூண்டதால் படம் கிடப்பில் உள்ளது.

இந்நிலையில் நேசமணி காமெடி டிரெண்ட் ஆனது குறித்து வடிவேலு இரு இணையத்துக்கு பேட்டி அளிக்கும்போது இவ்வாறு கூறியுள்ளார்.

 24-ம் புலிகேசி படத்தை சிம்புதேவன் இயக்குகிறாரா அல்லது சங்கரா என தெரியவில்லை. சங்கர் ஒரு கிராபிக்ஸ் டைரக்டர்.

காமெடி படம் குறித்து அவர் பேசுவது எந்த விதத்தில் நியாயம்? இப்படத்தில் என்னுடைய உண்மையான நடிப்பை அவர்கள் எதிர்பர்க்கவில்லை.

இவர்கள் என்னை நடிக்க விடவில்லை என்றாலும் எனக்கு என்ட் கார்டே கிடையாது. என் ரசிகர்கள் இருக்கும் வரைக்கும்..,” என தன்னுடைய தலைநகரம் படத்தின் காமெடி போல ஒரு பஞ்ச் அடித்துள்ளார்.