Connect with us

சுஷாந்த் சிங் இல்லாமல் ’தோனி 2’ படமில்லை: தயாரிப்பாளர் அதிரடி

பொழுதுபோக்கு

சுஷாந்த் சிங் இல்லாமல் ’தோனி 2’ படமில்லை: தயாரிப்பாளர் அதிரடி

பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புத் மறைவு பாலிவுட் திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில் ’தோனி 2’ படம் எடுப்பது குறித்த ஐடியா தனது மனதிலில் இருந்ததாகவும், ஆனால் சுஷாந்த்சிங் இல்லாமல் அந்த படத்தை எடுக்கும் ஐடியா இல்லை என்றும், தற்போது அந்த படம் கைவிடப்பட்டுவிட்டதாகவும் தயாரிப்பாளர் அருண்பாண்டே கூறியுள்ளார்
கடந்த 2016 ஆம் ஆண்டு வெளிவந்த ’தோனி’ திரைப்படத்தில் மிக அருமையாக சுஷாந்த்சிங் நடித்திருப்பார். தோனியின் ஜெராக்ஸ் போலவே அவரது மேனரிசங்கள் அனைத்தையும் செய்திருந்த சுஷாந்த்சிங்கின் கடுமையான உழைப்பின் காரணமாக தான் அந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது

தற்போது சுஷாந்த்சிங் மரணமடைந்து விட்டதால் அவர் அளவுக்கு அந்த கேரக்டரை உள்வாங்கி நடிப்பதற்கு ஆளே இல்லை என்றும் அதனால் தோனி 2’ படம் எடுக்கும் முடிவுகள் கைவிடப்பட்டதாகவும் அருண்பாண்டே தெரிவித்துள்ளது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

உலகக்கோப்பைக்கு பின்னர் தோனியின் வாழ்க்கையில் நடந்த கிரிக்கெட் மற்றும் சொந்த அனுபவங்கள் குறித்து ’தோனி 2’ படமாக தயாரிக்க அருண்பாண்டே முடிவு செய்திருந்தார் என்பதும் அதற்கான திரைக்கதை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது அந்த படம் கைவிடப்பட்டதாக கூறப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது#

Continue Reading
To Top