Connect with us

2000 ரூபாய் நோட்டு இனி கிடையாது: இந்தியன் வங்கி அறிவிப்பால் பரபரப்பு

செய்திகள்

2000 ரூபாய் நோட்டு இனி கிடையாது: இந்தியன் வங்கி அறிவிப்பால் பரபரப்பு

இந்திய ரிசர்வ் வங்கியின் உத்தரவின் அடிப்படையில் ரூ.2000 நோட்டுகளை ஏ.டி.எம். மையங்களில் இருந்து நீக்கும் நடவடிக்கையில் இந்தியன் வங்கி ஈடுபட்டுள்ளது. இதனையடுத்து இனிமேல் இந்தியன் வங்கி ஏ.டி.எம்.களில் ரூ.2000 நோட்டுகள் பணபரிவர்த்தனை செய்யப்பட மாட்டாது என இந்தியன் வங்கி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள இந்தியன் வங்கி அதில் மேலும் கூறியிருப்பதாவது: ரூ.2000 நோட்டுகளை வங்கி ஏ.டி.எம்.களில் வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டாம் என்றும், வங்கி கணக்குகளில் பணம் செய்யும் போது 2000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்த வேண்டாம் என்றும் அந்த அறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் வங்கி பணப் பரிவர்த்தனைகளிலும் இனிமேல் ரூ.2000 நோட்டுகள் புழக்கத்தில் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும், இந்த நடைமுறை மார்ச் 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று இந்தியன் வங்கி அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் விரைவில் ரூ.2000 நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிப்பு வருமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர்,

Continue Reading

அதிகம் படித்தவை

To Top