நிக் ஜோனஸ் -பிரியங்கா சோப்ரா திருமணம் நடைபெற்றது

தமிழன் படத்தில் தமிழில் அறிமுகமானவர் ப்ரியங்கா சோப்ரா. 2000ம் ஆண்டில் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட இவருக்கு தற்போது 36 வயதாகிறது. ஹாலிவுட் படங்களில் நடித்து வந்தபோது பாப் பாடகர் நிக் ஜோனசுக்கும் இவருக்கும் காதல் பற்றிக்கொண்டது.

பாப் பாடகர் நிக் ஜோனசுக்கு 26 வயதாகிறது. ப்ரியங்கா சோப்ராவுக்கு 36 வயதாகிறது இருவருக்கும் பத்து வருட இடைவெளி என்பது குறிப்பிடத்தக்கது.

நீண்ட நாட்களாக பல இடங்களில் ஜோடி போட்டு சுற்றி வந்த இந்த ஜோடிக்கு நேற்று முறைப்படி ஜோத்பூர் அரண்மனையில் திருமணம் நடைபெற்றது.

கிறித்தவ முறைப்படி நேற்று திருமணம் நடைபெற்றது. இன்று ஹிந்து முறைப்படியும் திருமணம் நடக்கிறது.