ஓவியா மீது மேலும் ஒரு வழக்கு

இயக்குனர் அனிதா உதீப் இயக்கத்தில் சமீபத்தில் திரைக்கு வந்திருக்கும் திரைப்படம் 90 எம்.எல். இந்த படத்தில் அளவுக்கதிகமான வகையில் இரட்டை அர்த்த வசனங்கள் பேசுதல்,புகை, மது, கஞ்சா, பிடிக்கும் காட்சிகள் என முன்னணி நடிகர்களெ செய்ய தயங்கும் காட்சிகளை நடிகைகளை வைத்து இப்படத்தில் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள் .

இப்படத்தில் நடித்த நடிகை ஓவியா

மீது நடவடிக்கை எடுக்கும்படி இந்திய தேசிய லீக் கட்சி சார்பில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டு உள்ளது. அதில் ஆபாசமாக நடித்துள்ள ஓவியாவை கைது செய்ய வேண்டும் என்றும், படத்தை தடை செய்ய வேண்டும் என்றும் வற்புறுத்தி இருந்தனர்.

இந்த நிலையில் தமிழர் கலாசார பேரவை சார்பில் அதன் மாநில சட்ட ஆலோசகர் பன்னீர்செல்வம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஓவியா மீது மேலும் ஒரு புகார் மனு அளித்துள்ளார்.

அதில், “ஓவியா நடித்துள்ள 90 எம்.எல். படத்தில் பாலுணர்வை தூண்டும் ஆபாச காட்சிகள் உள்ளன. இது தமிழ் பண்பாடு கலாசாரத்துக்கு அவமரியாதை ஏற்படுத்துவதுபோல் உள்ளது.

எனவே ஓவியா மீதும் தயாரிப்பாளர், இயக்குனர் மீதும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுத்து அவர்களை கைது செய்ய வேண்டும். படத்தை தடை செய்ய வேண்டும்” என்று கூறப்பட்டு உள்ளது.