Connect with us

நெட்டிசன்களிடம் வசமாக மாட்டிக்கொண்ட ஸ்டோய்னிஸ்…!!

விளையாட்டு

நெட்டிசன்களிடம் வசமாக மாட்டிக்கொண்ட ஸ்டோய்னிஸ்…!!

லார்ட்ஸ்:

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா இடையிலான ஆட்டம் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று ஜூன் 25 ஆம் தேதி நடைபெற்றது.

செம ஜோடி:

டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய அணியின் பின்ச், டேவிட் வார்னர் ஆகியோர் துவக்க வீரர்களாக ஆடினர். பின்ச், டேவிட் வார்னர் ஜோடி துவக்கம் முதலே அதிரடியாக ஆடியது.

வார்னர் 52 பந்திலும், ஆரோன் பிஞ்ச் 61 பந்தில் 50 அரைசதம் அடித்தனர். இந்நிலையில் வார்னர் அடுத்த ரன்னிலேயே (53 ரன்) ஆட்டமிழந்தார்.

பிஞ்ச்க்கு வந்த சோதனை:

வார்னர் ஆட்டமிழந்த்தை அடுத்து பிஞ்ச் உடன் கவாஜா இணைந்தார். கவாஜா அதிர்ச்சியளிக்கும் வகையில் 23 ரன்னில் ஆட்டமிழந்தார், பின்ச் சீராக விளையாடி தனது சதத்தைப் பதிவு செய்தார். எப்படியும் அதிக ரன்கள் குவித்திடுவார் என்றிருந்த ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்து சதம் அடித்த அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார்.

தொடர் விக்கெட்டுகள்:

ஸ்டோய்ன்ஸை வெச்சு செய்யும் நெட்டிசன்கள்... !!

அடுத்த இறங்கிய ஆஸ்திரேலிய அணி வீரர்கள் எதிர்பார்ப்பினை மேலும் மேலும் குறைக்கும் வகையில் சொதப்பலான ஆட்டத்தையே கொடுத்தனர். மேக்ஸ்வெல் 12 ரன்னிலும், ஸ்மித் 38 ரன்னிலும், ஸ்டோய்னிஸ் 8 ரன்னிலும் தொடர்ச்சியாக ஆட்டமிழந்தனர். 

சிரிப்பொலியில் மைதானம்:

இங்கிலாந்துக்கு எதிரான முக்கிய போட்டியில் ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டரான மார்கஸ் ஸ்டோய்னிஸ் அவுட்டான விதம் ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது. நெட்டிசன்களின் வலைக்குத் தீனி போடும்படியாக ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தினாரே பாருங்கள்.. அரங்கமே அதிரும் அளவு சிரிப்பொலி எழுந்தது.

என்னதான் நடந்தது?

ஸ்மித் லாங் ஆப் திசைக்கு பந்தை அடிக்க முயற்சி செய்கையில், அது டீப் திசைக்கு செல்கிறது. ஸ்டோய்னிஸ் நான் ஸ்டிரைக் திசையில் இருந்து, வேகமாக ஓடி ஒரு ரன் எடுத்துவிட்டு, ஸ்மித்தை பார்க்காமல் 2வது ரன்னை எடுக்க ஓடிவிட்டார். 

கலக்கிய ஸ்டோய்ன்ஸ்:

ஸ்மித்தும் கிளம்புவது போல கிளம்பி பொசிஷனை மாற்றிவிடுகிறார். இருவரும் ஓடி வந்து ஒரே முனையில் நிற்கையில் களத்தில் குழப்பம் நிலவியது. செய்வதறியாது நின்ற ஸ்டோய்னிஸ் ரன் அவுட் ஆனதுதான் மிச்சம். இணையத்தில் மிகச் சிறப்பாக வலம் வந்துகொண்டுள்ளார் ஸ்டோய்னிஸ்.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top