Connect with us

டிக்டாக் லைக்ஸ்களுக்காக பூனையை தூக்கிலிட்ட வீடியோ: அதிர்ச்சி தகவல்

செய்திகள்

டிக்டாக் லைக்ஸ்களுக்காக பூனையை தூக்கிலிட்ட வீடியோ: அதிர்ச்சி தகவல்

டிக் டாக் வீடியோக்களில் லைக்ஸ்கள் பெறுவதற்காக பல்வேறு விபரீதங்களில் ஒருசிலர் ஈடுபட்டு வருவது குறித்த செய்திகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன

இந்த நிலையில் நெல்லையை சேர்ந்த வாலிபர் ஒருவர் டிக்டாக்கில் அதிக லைக்ஸ்களை பெறுவதற்காக தான் செல்லமாக வளர்த்த பூனையைத் தூக்கிலிட்டு அதை வீடியோ எடுத்து பதிவு செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

இந்த வீடியோ டிக்டாக்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து மிருகவதை இயக்கத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அந்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்

டிக்டாக்வீடியோ வீடியோக்களில் தனக்கு அதிகமாக லைக்ஸ்கள் கிடைக்கவில்லை என்றும் அதனால் அதிகமாக லைக்ஸ்கள் கிடைக்க இவ்வாறு செய்ததாகவும் அவர் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார் என்று கூறப்படுகிறது டிக் டாக் வீடியோ லைக்ஸ்கள் பெற ஒரு உயிரைக் கொன்ற இளைஞருக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது

Continue Reading

அதிகம் படித்தவை

To Top