Connect with us

வில்லன் வேடத்தில் விஜய் சேதுபதி

பொழுதுபோக்கு

வில்லன் வேடத்தில் விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி கதையின் நாயகனாக மட்டுமே இதுவரை நடித்த படங்கள் உள்ளது. கதாநாயகனாக றெக்க, கருப்பன் உள்ளிட்ட சில கமர்சியல் படங்களில் மட்டுமே நடித்துள்ளார். அனைத்து படங்களிலுமே வித்தியாசமான வேடத்தை அதாவது வயதானவராக இருந்தாலும் பரவாயில்லை என்று பல கேரக்டர்களில் நடிப்பதால்தான் இவரை கதையின் நாயகன் என்று சொல்கிறோம்.

இவர் கதாநாயகனாகவோ அல்லது அமைதியான கதாபாத்திரத்திலோ மட்டுமல்ல வில்லன் வேடத்திலும் தொடர்ந்து வெளுத்து கட்டி வருகிறார்.

விக்ரம் வேதா, பேட்ட படங்களை தொடர்ந்து தற்போது தெலுங்கு படம் ஒன்றில் வில்லனாக இவர் நடிக்கிறார்.

ரங்கஸ்தலம் படத்தின் கதை வசனகர்த்தா புஜ்ஜி பாபு இயக்கும் ஒரு தெலுங்கு படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார்.

வைஷ்ணவ் தேவ் என்பவர் இப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

Continue Reading
To Top