சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற வேப்பம்பூ பொடி

வாழை மரத்தின் இலை முதல், நார் வரை அனைத்தும் மருத்துவ குணம் கொண்டது. அதன் இரட்டை என்று சொல்லும் அளவு வேப்ப மரத்தின் அனைத்து பாகங்களும்கூட மருத்துவ குணத்தினைக் கொண்டுள்ளது. இதன் இலை அம்மை நோய்க்கு மருந்தாகப் பயன்படுகிறது. இதன் காய்கள் கசப்பானது என்பதால் இதன் பழத்தினை சர்க்கரை நோயாளிகள் மருந்தாகக் கொள்வர். இதன் காயும் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற ஒரு அரிய மருந்தாகும். வேப்பம்பூ மற்ற பாகத்தினைக் காட்டிலும், கசப்புத்தன்மை குறைவானது. இதனா இதனை சர்க்கரை நோயாளிகள் மட்டுமல்லாது பெரியவர் முதல் குழந்தைகள் வரை அனைவரும் உண்ணலாம்.

5d6d8cf8b563e8188f9a21bc7e0bec19

தேவையான பொருட்கள்:

வேப்பம்பூ – ஒரு கப்

எண்ணெய் – இரண்டு டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு – மூன்று டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் – இரண்டு

புளி – கோலி குண்டு அளவு

உப்பு – தேவைகேற்ப

செய்முறை:

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உளுத்தம் பருப்பு மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளவும்.

பின், அதே கடாய் காய்ந்ததும் வேப்பம்பூ சேர்த்து லேசாக வறுத்து எடுத்து கொள்ளவும். வறுத்த உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், வேப்பம்பூ மற்றும் உப்பு, புளி சேர்த்து அரைக்கவும்.

சூட சாதத்துடன் பிசைந்து சாப்பிடால் சுவையாக இருக்கும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.