Connect with us

10ஆம் வகுப்பு தேர்வு முடிவு: தாய்மொழி பாடத்திலேயே 8 லட்சம் மாணவர்கள் தோல்வி

செய்திகள்

10ஆம் வகுப்பு தேர்வு முடிவு: தாய்மொழி பாடத்திலேயே 8 லட்சம் மாணவர்கள் தோல்வி

இந்தி மொழியை தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் கொண்டு வர வேண்டும் என்றும் தேசிய மொழியாக இந்தி மொழியை அறிவிக்க வேண்டும் என்றும் நாடு முழுவதும் ஒரே மொழி இந்திதான் என்பதைக் கொண்டு வர வேண்டும் என்றும் மத்திய அரசு தீவிர முயற்சி செய்து வருகிறது

இந்த நிலையில் இந்தியை தாய்மொழியாக கொண்ட உத்தரப் பிரதேசத்தில் சுமார் 8 லட்சம் மாணவர்கள் இந்தி தேர்வில் தோல்வி அடைந்துள்ள தகவல் தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

உத்தரபிரதேச மாநிலத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில் இந்தத் தேர்வின் முடிவுகள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வெளியாகின

சுமார் 56 லட்சம் மாணவர்கள் எழுதிய இந்த தேர்வில் மொழிப் பாடத்தில் மட்டும் அதாவது தாய் மொழியான ஹிந்தி பாடத்தில் மட்டும் சுமார் 8 லட்சம் மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர். 7 லட்சத்து 95 ஆயிரம் மாணவர்கள் தாய் மொழி பாடத்தில் தோல்வி அடைந்தது அம்மாநில கல்வித் துறைக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது

மேலும் இந்தி தேர்வை சுமார் 2 லட்சத்து 19 ஆயிரம் மாணவர்கள் எழுதவே இல்லை என்ற தகவலையும் மாநில தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது

இந்தி கற்பது தங்கள் எதிர்காலத்துக்கு தேவையில்லாத ஒன்று என மாணவர்கள் கருதுவதே இந்த தோல்விக்கு காரணம் என ஆசிரியர்கள் கூறியிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இந்தி பேசும் மாநிலத்திலேயே இந்தி தேவையில்லை என்று மாணவர்கள் கருதும் நிலையில் இந்தி பேசாத தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் இந்தியை திணிப்பது ஏன் என்ற கேள்விதான் தற்போது அனைவர் மனதிலும் எழுந்துள்ளது

Continue Reading
To Top