நாயே பேயே பட பூஜை ஆரம்பம்

கடந்த 2018ல் வெளியான திரைப்படம் ஒரு குப்பைக்கதை இப்படத்தில் நடித்திருந்தவர் தினேஷ். இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடன இயக்குனராவார்.குப்பைக்கதையின் மூலம் அறிமுகமான தினேஷ் தற்போது நடிக்க இருக்கும் படம் நாயே பேயே.

என்ன பெயரே வித்தியாசமாக இருக்கிறதா யாரையோ திட்டுவது போல் உள்ளதா. படம் ஒரு ஜாலியான படமாகத்தான் இருக்கும் என பெயரை வைத்தே அறிய முடிகிறது.

படத்தை கட்டிங் அண்ட் ஒட்டிங் ஸ்டுடியோ மற்றும் கலை ஆர்ட் சார்பாக எடிட்டர் கோபி கிருஷ்ணா தயாரிக்கிறார். படப்பெயரில் இருந்து படம் தயாரிக்கும் நிறுவனம் வரை எல்லாமே வித்தியாசமாக உள்ளது.

பல தேசிய விருது வென்ற குறும்பட இயக்குனர் சக்திவாசன் இப்படத்தை இயக்குகிறார்.

இன்று

எடிட்டர் மோகன் துவங்கி வைத்த இப்பட பூஜையில், தம்பி ராமையா, இயக்குனர் பேரரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஒரு ஜாலியான திருடனை பற்றிய கதையாம் இது.