நாவின் சுவை அரும்புகளை மலர செய்யும் கறிவேப்பிலை தொக்கு


8594020dbaca96ef081df89971b3d911

எது சாப்பிட்டாலும் ருசி தெரியவில்லையா?! ஹோட்டல் சாப்பாட்டினால் நாக்கிற்கு ருசி தெரியலியா?! காய்ச்சல், சளி தொந்தரவுக்கு ஜீரணத்துக்கும், நாவின் ருசியை மீட்டு கொண்டுவரவும் கறிவேப்பிலை தொக்கு செய்து சாப்பிடலாம்.

தேவையான பொருட்கள்..

கறிவேப்பிலை (உருவியது) – 2 கப்,

உளுத்தம்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்,

காய்ந்த மிளகாய் – 8 (அல்லது காரத்துக்கேற்ப),

புளி – எலுமிச்சை அளவு,

சீரகம் – 1 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

தாளிக்க..

நல்ல எண்ணெய், கடுகு,

d6d0aa34f10a15b92096f0506b1d6c56

செய்முறை:

கறிவேப்பிலையை கழுவி, துடைத்து உலரவிடவும். வாணலியில் எண்ணெய் விட்டு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், சீரகம் சேர்த்து நன்கு வறுத்து எடுத்துக்கொண்டு… கறிவேப்பிலையை அதே எண்ணெயில் கொஞ்சம் கொஞ்சமாக வதக்கி எடுக்கவும். வதக்கிய கறிவேப்பிலை, ஊறிய புளி, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், சீரகம், உப்பு சேர்த்து மிக்ஸியில் மையாக அரைக்கவும். வாணலியில் எண்ணெயைக் காய வைத்து கடுகு, பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய் தாளித்து கொட்டி பயன்படுத்தலாம். அப்பவே பயன்படுத்தும்போது கொஞ்சம் தேங்காய் துருவலையும் சேர்த்து அரைக்கலாம்.

ஒருவாரம் வரை தொக்கு தாக்குபிடிக்க வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சேர்த்து, அரைத்த கறிவேப்பிலை விழுது, சிறிது வெல்லம் சேர்த்து மெல்லிசான தீயில் 5 நிமிடம் வதக்கினால் ஒரு வாரம் வரை தாங்கும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews