தேசிய விருது வென்ற கலை இயக்குனர் – வறுமையில் வாடும் அவலம்

பிரபல கலை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி தமிழ்நாட்டில் சிற்ப வேலைக்கு புகழ்பெற்ற கண்ணகி வாழ்ந்த பூம்புகாரில் பிறந்து தமிழ் சினிமாவின் 90களில் வந்த அனேக படங்களில் பணிபுரிந்து இருக்கிறார்.

அழகான அருமையான செட் போடுவது, ஓவியம் தீட்டுவது என இந்த துறையில் கிருஷ்ணமூர்த்தி மிகப்பெரிய லெஜண்ட்.

தமிழில் வண்ண வண்ண பூக்கள், ஆத்மா,அழகி, சங்கமம்,இந்திரா மோகமுள், பசும்பொன், குட்டி, வானவில், பாண்டவர் பூமி, பாரதி , இம்சை அரசன்,உள்ளிட்ட படங்களில் சிறப்பான செட்களை அமைத்ததன் மூலம் மிகப்பெரிய அளவில் சாதனை படைத்தவர்.

மோகமுள், பாரதி போன்ற படங்களில் சுதந்திரத்துக்கு முந்தைய கால வீதிகள் செட் அமைத்து கவனம் ஈர்த்தவர்.

சரித்திர படங்கள், மலையாள , தெலுங்கு படங்கள் பலவற்றுக்கு கிருஷ்ணமூர்த்தி பணிபுரிந்துள்ளார்.

சமீப காலமாக தனது பொருளாதாரம் இழந்து மிகவும் வறுமையில் வாடுகிறாராம். தேசிய விருதுகள், கலைமாமணி விருதுகள், உள்ளிட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட விருதுகள் வென்றிருக்கும் கிருஷ்ணமூர்த்தி கலைமாமணியில் சிலவற்றை விற்றுதான் தன் இருதய ஆபரேசனையே செய்தாராம்.

வறுமை எவ்வளவு கொடியது பாருங்கள். இத்தனை சிறப்பான படங்களில் செட் போட்டு நற் பெயர் எடுத்தாலும் இவரின் இவரின் வறுமை அனைவரையும் கலங்க செய்வது உண்மை.