உங்கள் நட்சத்திரத்திற்கான அபிஷேக பொருள் என்ன தெரியுமா?

ஒவ்வொரு நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் அபிஷேகம் செய்ய வேண்டிய பொருட்கள் பற்றி விரிவாக காணலாம். இந்த அபிஷேக பொருளை கோவில்களுக்கு ஏதேனும் விசேஷ காலத்திலும் அல்லது உங்கள் பிறந்த நட்சத்திர தினத்தன்றும் வாங்கி தரலாம்.

அஸ்வினி நட்சத்திரம் பிறந்தவர்கள் சுகந்த தைலம் வாங்கி தரலாம்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மாவுப்பொடி வாங்கி தரலாம்.

கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நெல்லிப் பொடி வாங்கி தரலாம்.

ரோகினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மஞ்சள் பொடி வாங்கி கொடுக்கலாம்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திரவியப்பொடி வாங்கி தரலாம்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பஞ்சகவ்வியம் பொருளை வாங்கி தரலாம்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பஞ்சாமிர்தம் வாங்கி தரலாம்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மா, பலா மற்றும் வாழை போன்றவற்றால் பலாமிர்தம் கொடுக்கலாம்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பால் வாங்கி கொடுக்கலாம்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தயிர் வாங்கி கொடுக்கலாம். குறிப்பாக சிம்மம் ராசியினர் சிவன் கோயில்களுக்கு பிரதோஷ காலத்தில் தயிர், பால் போன்றவற்றை கொடுப்பதனால் நல்ல பலன் கிடைக்கும்.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நெய் அதுவும் பசு நெய் வாங்கி தருவது சிறப்பானதாகும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சர்க்கரை அல்லது வெல்லம் வாங்கி தரலாம்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தேன் வாங்கி தரலாம்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கரும்புச்சாறு வாங்கி தரலாம்.

ஸ்வாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பழச்சாறு வாங்கி தரலாம். குறிப்பாக, எலுமிச்சை, நார்த்தம் பழச்சாறு வாங்கி கொடுக்கலாம்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இளநீர் வாங்கி கொடுக்கலாம்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அன்னம் கொடுத்து வர குடும்பத்தில் மற்றும் வெளி இடங்களில் வரும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம். அதுவும் அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முடிந்த அளவிற்கு காகம், நாய், பசு போன்ற ஜீவராசிகளுக்கு உணவு கொடுக்கலாம்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் விபூதி வாங்கி தரலாம்.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சந்தனம் வாங்கி தரலாம்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வில்வம் வாங்கி தரலாம்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தாராபிஷேகம் பொருளை வாங்கி கொடுக்கலாம். இந்த பொருளில் சிறு துவாரமிட்டு, சொட்டு சொட்டு என்று நீர் விழும். சிவனை எப்பொழுதும் தண்ணீர் கொண்டு அபிஷகம் செய்ய வேண்டும் என்பதால் அவரை குளிர்ச்சி செய்ய இந்த பாத்திரம் அவர் தலையின் மீது வைப்பர். இதில் இருந்து தண்ணீர் சொட்டு சொட்டு என்று லிங்கத்தின் மேல் விழுந்து கொண்டே இருக்கும்.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கொம்பு தீர்த்தம் வாங்கி தரலாம்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சங்காபிஷேகம் செய்வது சிறப்பானதாகும்.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பன்னீர் கொடுத்து வரலாம்.

புரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சொர்ணாபிஷேகம் செய்யலாம்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெள்ளி போன்றவை கடவுளுக்கு கொடுத்து வரலாம்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஸ்நபனம் செய்யலாம். ஸ்நபனம் என்பது ஐந்து வகையான தீர்த்தம் ஆகும். இதனை கொண்டு அபிஷேகம் செய்தால் நினைத்த காரியம் வெற்றி அடையக்கூடும்.