நரசிம்மரிடம் விரும்பிய வரம் பெறவேண்டுமா?! அப்ப, இப்படி ஐஸ் வைங்க….

9ba8d3827f8050da1fdcc8bdde866a93-1

தேவையானபொருட்கள்:

அரிசி – கால் ஆழாக்கு
புளிப்பில்லாத தயிர் – 2 கப், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – ஒன்று, இஞ்சி 
கறிவேப்பிலை, கொத்தமல்லி கடுகு கடலை பருப்பு, உளுத்தம்பருப்பு… காய்ந்த மிளகாய் – 1 பெருங்காயப்பொடி, உப்பு தேவையான அளவு

cb4b9ba88cfd11a76e5edc557f5331dc

செய்முறை:

அரிசியை 2 மணிநேரம் ஊறவைத்து நன்றாக குழைய வேகவிட்டு வடித்துக்கொள்ளவும். சாதத்தினை நிமிர்த்தி, சூடாய் இருக்கும்போதே கரண்டியால் சாதத்தினை மசித்துக்கொள்ளவும். வாணலிலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விட்டு, கடலைப்பருப்பும் உளுத்தம்பருப்பு போட்டு சிவந்ததும், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய்,நசுக்கிய இஞ்சி போட்டு வதக்கி தயிரில் சேர்த்து, பெருங்காய தூள், தேவையான அளவுக்கு உப்பு சேர்த்து நன்றாக கலக்கி வெந்த சாதத்தில் கொட்டி கிளறவும்.

பின்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்துக்கொள்ளவேண்டும். விருப்பப்பட்டால்
கேரட் துருவல், பொடியாக நறுக்கிய மாங்காய், மாதுளை முத்துக்கள், திராட்சை – 20, 
பொடியாக நறுக்கிய ஆப்பிள், வெள்ளரித் துண்டுகள் சேர்த்துக்கொள்ளலாம்.

நரசிம்ம ஜெயந்தியான இன்று, நரசிம்மருக்கு நைவேத்தியமாய் இந்த தயிர் சாதத்தினை படைக்கும்போது நரசிம்மர் உள்ளம் குளிர்ந்து கேட்கும் வரம் தருவார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews