Connect with us

நான் யாரையும் ஏமாற்றவில்லை: என்னிடம்தான் பெண்கள் ஏமாந்தார்கள் நாகர்கோவில் காசி

செய்திகள்

நான் யாரையும் ஏமாற்றவில்லை: என்னிடம்தான் பெண்கள் ஏமாந்தார்கள் நாகர்கோவில் காசி

தான் எந்த பெண்ணையும் ஏமாற்ற வில்லை என்றும் என் அழகைப்பார்த்து தான் பெண்கள் விழுந்தார்கள் என்றும் நாகர்கோவில் விசாரணையில் கூறியிருப்பதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
சென்னையை சேர்ந்த பெண் டாக்டர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் நாகர்கோவில் காசி கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் நூற்றுக்கணக்கான பெண்களை ஏமாற்றி உள்ளதும் அவர்களின் வாழ்வை சீரழித்துள்ளதும் தெரியவந்தது. இதனை அடுத்து காசி மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை காவலில் எடுத்து விசாரணை செய்து வருகின்றனர்

காசியின் லேப்டாப்பில் உள்ள ஆதாரங்களை வைத்து விசாரணை செய்தபோது தான் எந்த பெண்களையும் ஏமாற்றவில்லை என்றும் பெண்களாகத்தான் வந்து தன்னுடைய அழகில் மயங்கி விழுந்ததாகவும் தனக்கு பணம் தேவை இருந்ததால் அவர்களை பயன்படுத்திக் கொண்டதாகவும் கூறினார்

மேலும் என் மீது புகார் கொடுத்த பெண் டாக்டரை கேட்டுப்பாருங்கள் நானாக சென்று அவரை ஏமாற்ற வில்லை என்றும் எந்த பெண்ணையும் திருமணம் செய்து கைவிடவில்லை என்றும் கூறியிருப்பது போலீசாரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது

இந்த நிலையில் மேலும் காசியிடம் விசாரணை நடந்து கொண்டிருப்பதாகவும் விசாரணை முடிந்த பிறகே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது

Continue Reading

அதிகம் படித்தவை

To Top