Connect with us

அனுஷ்கா சர்மாவின் ‘பரி’ ரீமேக்கில் நயன்தாரா?

பொழுதுபோக்கு

அனுஷ்கா சர்மாவின் ‘பரி’ ரீமேக்கில் நயன்தாரா?

இம்மாதம் 2ஆம் தேதி பாலிவுட்டில் வெளியான ‘பரி’ திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகியது. ஹாரர் கலந்த பேய்ப்படமான இந்த படத்தில் அனுஷ்கா சர்மா நடித்திருந்தார். அனுஷ்கா நடித்த படங்களிலே இதுதான் பெஸ்ட் என்று அவரது கணவர் விராத் கோஹ்லி சமீபத்தில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ‘பரி’ திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்ய முன்னணி இயக்குனர் ஒருவர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். மேலும் அவர் அனுஷ்காவின் கேரக்டரில் நயன்தாராவை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே நயன்தாரா நடித்த பேய்ப்படங்களான மாயா’ மற்றும் ‘டோரா’ ஆகிய படங்கள் வெற்றி பெற்றுள்ளதால் இந்த படத்தில் நயன்தாரா நடித்தால் மட்டுமே பொருத்தமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது

வீடியோக்களைப் பெற Subscribe செய்யவும் இங்கே:
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top