Connect with us

வாட்ச்மேன் படத்துக்காக வைரல் ஆகும் நாயுடன் இருக்கும் புகைப்படம்

பொழுதுபோக்கு

வாட்ச்மேன் படத்துக்காக வைரல் ஆகும் நாயுடன் இருக்கும் புகைப்படம்

ஜிவி பிரகாஷ்குமார் நடிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படம் வாட்ச்மேன். சஸ்பென்ஸ் த்ரில்லரான இப்படம்.

கோல்டன் ரெட்ரீவர் வகையை சேர்ந்த நாய் ஒன்றும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து உள்ளது. 

இத்திரைப்படத்தை டபுள் மீனிங் புரொடக்சன் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் அருண் மொழி மாணிக்கம் தயாரித்துள்ளார். 

ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.  காட்சிகளால் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் நிரவ் சர்மா மற்றும் சரவணன் ராமசாமி இருவரும் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.

பாடல் வரிகளை அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ளார். ஆண்டனி படத் தொகுப்பு செய்துள்ளார், கலை இயக்குநர் ராஜேஷ் கலை இயக்கம் செய்துள்ளார்.  மனோகர் வர்மா சண்டை காட்சிகளை அமைத்துள்ளார். இயக்குநர் விஜய் படத்தை எழுதி, இயக்கியிருக்கிறார்.

இப்படத்தின் ப்ரமோஷனுக்காக டுவிட்டரில் மைவாட்ச்மேன் என்று ஆங்கிலத்தில் ஹேஷ்டேக் போட்டு ஒரு காண்டெஸ்ட் நடந்து வருகிறது. பலரும் அதன்படி தெருநாய்களோடும் தங்கள் வளர்ப்பு நாய்களோடும் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர்.

Continue Reading
To Top