என்னிடம் அன்பு மட்டுமே உள்ளது பணம் இல்லை- வேட்பாளர் பவர் ஸ்டார்

லத்திகா என்ற படத்திற்காக 50 வது நாள் 100வது நாள் விளம்பரம் எல்லாம் நாளிதழ்களில் கொடுத்து யார்ரா இவர் என அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர் பவர் ஸ்டார்.

மக்களின் கேலி, கிண்டல்கள் மூலமாகவே சினிமா காமெடியராகி போனார். மருத்துவ தொழில் செய்த இவரின் பெயரான சீனிவாசனுக்கு முன்பாக பவர்ஸ்டார் என்று போட்டுக்கொண்டதன் மூலமாகவே முன்னிலை அடைந்தார்.

சந்தானம் உள்ளிட்டவர்களின் படங்களில் நடித்தும் புகழ்பெற்றார்.

இந்நிலையில் பவர் ஸ்டார் வரும் நாடாளுமன்ற தேர்தலில் தென் சென்னை வேட்பாளராக செகு தமிழரசனின் குடியரசு கட்சி சார்பாக களமிறங்குகிறார்.

மக்களுக்கு பணம் கொடுப்பிங்களா என்ற டி வி நிருபரின் கேள்விக்கு தம்பி என்கிட்ட அன்புதான் தம்பி இருக்கு அததான் தம்பி கொடுக்க முடியும் என்று வழக்கமான தனது பாணியில் பதிலளித்தார்.