மும்பை அணி வெற்றி! ஆனாலும் கடைசிப் பந்தில் பெரும் சர்ச்சை!

ஐபில் தொடரின் 7வது போட்டி மும்பை அணிக்கும் பெங்களூர் அணிக்கும் இடையே பெங்களூரில் நடந்தது.

Mumbai Indians

இப்போட்டியில் பெங்களூர் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

மும்பை அணியில் தொடக்க வீரர்களான குயின்டன் டி காக் மற்றும் ரோஹித் சர்மா இருவரும் நல்ல தொடக்கத்தை தந்தனர். குயின்டன் டி காக் 23 ரன்களும், ரோஹித் சர்மா 48 ரன்களும் எடுத்தனர். சூரியகுமார் யாதவ் 38 ரன்கள் எடுத்தார்.

யுவராஜ் சிங் 23 ரன்கள் எடுத்தார். சாஹல் ஓவரில் யுவராஜ் சிங் ஹாட்ரிக் சிக்ஸ் அடித்ததைக் கண்டு ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் அடுத்த பந்திலேயே அவர் ஆட்டமிழந்தார். ஹர்திக் பாண்டியா அதிரடியாக விளையாடி 14 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களே எடுத்தனர்.

பெங்களூர் அணியில் யுவேந்திர சாஹல் 4 விக்கெட்டுகளும், உமேஷ் யாதவ் மற்றும் முகமத் சிராஜ் இருவரும் தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புடன் 187 ரன்கள் எடுத்தது.

வெற்றிப் பெற 188 ரன்கள் தேவை என்ற இலக்குடன் பெங்களூர் அணி பேட்டிங் செய்தது. தொடக்க வீரர் பார்திவ் பட்டேல் 31 ரன்களும், மொயீன் அலி 13 ரன்களும் எடுத்தனர். விராட் கோலி 46 ரன்கள் எடுத்தார். அதோடு சுரேஷ் ரெய்னாவிற்கு அடுத்து ஐபில் தொடரில் 5,000 ரன்களை எட்டிய இரண்டாவது வீரர் என்ற பெருமையும் இப்போட்டியில் பெற்றார். ஏபி டி வில்லியர்ஸ் அதிரடியாக விளையாடி

போட்டியின் கடைசிப் பந்தில் வெற்றி பெற 7 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. லசித் மலிங்கா வீசிய கடைசிப் பந்தில் ரன்கள் ஏதும் எடுக்கப்படவில்லை. ஏபி டி வில்லியர்ஸ் 70 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புடன் 181 ரன்கள் எடுத்தது. இதனால் மும்பை அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.

ஆனாலும் இப்போட்டியின் கடைசிப் பந்து சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. மலிங்கா வீசிய கடைசிப் பந்து நோ பால் என்பது ரீப்ளேவில் தெரிந்தது. ஆனால் அம்பயர் அதனை கவனிக்காமல் போட்டியை முடித்துவிட்டார். சரியாக கவனிது, அது நோ பால் கொடுக்கப்பட்டிருந்தால் ஆட்டத்தின் முடிவு மாறியிருக்கலாம். தற்போது, மும்பை அணி வெற்றிப் பெற்றதில் மாற்றம் எதுவும் இல்லை.