மிஸ்டர் லோக்கல் எப்படி உள்ளது

நேற்று வெளியான மிஸ்டர் லோக்கல் படம் எப்படி உள்ளது படத்தை பார்த்த ரசிகர்கள் சொன்ன கருத்துக்கள், பெரும்பான்மை விமர்சனங்கள் அடிப்படையில் இப்படம் எப்படி உள்ளது என்று பார்ப்போம்.

இயக்குனர் ராஜேஸ் எம்மின் வழக்கமான பாணி கதைதான் என்றாலும் இப்படத்தின் ஒன்லைன் மன்னன் படத்தில் இருந்து எடுத்து அதை வேறு விதமான காமெடி திரைக்கதையாக மாற்றி இருக்கிறார்கள்.

சந்தானம் இருந்துமே ஆல் இன் ஆல் அழகுராஜா, வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படங்கள் எல்லாம் படு பயங்கர தோல்வியை சந்தித்தது.

முந்தைய தோல்வியில் இருந்து இயக்குனர் பாடம் கற்றுக்கொண்டதாய் தெரியவில்லை. காமெடிகள் எல்லாம் சிரிப்பே வராத ரகமாக உள்ளது.வழக்கமான பாணி திரைக்கதையும் சோர்வைத்தான் தருகிறது.

நயன் தாராவிடம் மோதுவதுதான் படத்தின் கதை. அதை காமெடியாக சொல்லி இருக்கிறார்கள்.

காமெடி பாத்திரங்கள் அதிகம் பேர் உள்ளார்கள் இருந்தும் சிறப்பு இல்லை படத்தில்

பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் இயக்குனர் ராஜேஸ் எம் அவர்களே.