மிஸ்டர் லோக்கல் சூப்பர் ஹிட் ஆக வேண்டி கொண்ட சிறுமி

சிவகார்த்திகேயன் நடிப்பில் மிஸ்டர் லோக்கல் படம் நாளை வெளிவருகிறது. கலகலப்பான படமாக உருவாகி இருக்கிறது. ராஜேஸ் படம் என்றாலே கலகலப்புக்கு பஞ்சம் இருக்காது. ராஜேஸ் எம் படத்தில் முதன் முறையாக சந்தானம் மிஸ் ஆகி இருக்கிறார்.

இருந்தாலும் யோகிபாபு , சதீஸ் என நட்சத்திர காமெடி பட்டாளங்கள் உள்ளது. சந்தானம் அளவுக்கு இவர்களின் காமெடி ராஜேஸ் எம் படத்தில் ஒர்க் அவுட் ஆகுமா என படம் வந்த பிறகுதான் தெரியும்.

நயன் தாரா சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணைந்துள்ள படம் இது.

இந்நிலையில் இப்படம் வெற்றிபெற வேண்டுமென சிவகார்த்திகேயனின் குட்டி ரசிகை ஒருவர் ஸ்ரீரங்கம் கோவிலில் படம் வெற்றிபெற வேண்டிகொண்டாராம்.