தாயை கொலை செய்த முன்னாள் எம்.பி மகன்

முன்னாள் அதிமுக எம்.பி குழந்தை வேலு இவரது மகன் பிரவீண். லண்டன் நகர குடியுரிமை பெற்று அங்கேயே இவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சொத்து பிரச்சினைக்காக சென்னை வந்துள்ளார் பிரவீண்.

சொத்து பிரச்சினை குறித்து பேசுவதற்காக ஒரு மாதத்திற்கு முன் தமிழகம் வந்த பிரவீனிடம் அவரது தாய் ரத்தினம் பிரச்சினை குறித்து பேச வந்துள்ளார்.

அப்போது இருவருக்கும் இடையே தகராறு முற்றியதில், பிரவீண், தனது தாய் ரத்தினத்தை கழுத்தை நெரித்தும், கத்தியால் குத்தியும் கொலை செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த சாஸ்திரி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, உடலை பிரேத பரிசோதனக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, தப்பியோடிய பிரவீணை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.