Connect with us

முகினுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த அம்மா மற்றும் தங்கை!

பொழுதுபோக்கு

முகினுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த அம்மா மற்றும் தங்கை!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சி பெரிதளவில் சண்டை ஏதும் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட சேரன் சீக்ரெட் ரூமில் தனிமையில் உள்ளார். பிக் பாஸ் வீட்டுக்குள் மட்டும் அனைவரிடமும் பேசிக் கொண்டு இருந்தாரா என்ன? அங்கும் தனிமைதானே, அதனால் அவருக்கு இது புதிய விஷயமாக இருக்கவில்லை.

நேற்று டாஸ்க்காக பிக் பாஸிடமிருந்து ஒரு அறிவிப்பு வந்தது, வீட்டின் மொத்த கன்ட்ரோலும் பிக் பாஸிடம் செல்வதாகவும், அதன்படி, ப்ரீஷ், பார்வேர்டு, ரீவைண்ட், ஸ்லோமோஷன் என்று நான்கு கண்ட்ரோல் செயல்படுத்தப்படும் என அறிவுரை வழங்கினார்.

 அவ்வாறு ப்ரீஷ் என்று சொல்ல அனைவரும் ப்ரீஷ் ஆகி நின்று கொண்டு இருந்தனர், அப்போது அம்மா அம்மா பாடல் ஒலிக்க, அனைவரும் யாரோ ஒருவருடைய அம்மா வரவுள்ளார் என்பதனை அறிந்து ஆவலுடன் பார்த்தனர்.

 பிக் பாஸ் வீட்டிற்கு முகெனின் அம்மா நிர்மலா வர, முகின் ஓடி கட்டியணைத்து மகிழ்ச்சியில் அழுதார்.


அதன்பின்னர் அம்மாவை அழைத்து சென்று வீட்டினை சுற்றிக்காட்டினார். அதன்பின்னர் சகோதரி ஜனனி கிச்சன் டோர் வழியாக வீட்டிற்குள் நுழைந்தார்.

அனைவருடனும் நிர்மலா, ஜனனி ஆகியோர் பேசினர், 78 நாட்களாக யாரையும் பார்க்காத போட்டியாளர்களுக்கு இது பெரிய அளவில் மகிழ்ச்சியூட்டியதாக இருந்தது.


Continue Reading

அதிகம் படித்தவை

To Top