Connect with us

53 லட்சத்தை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு: இந்தியாவில் எவ்வளவு?

செய்திகள்

53 லட்சத்தை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு: இந்தியாவில் எவ்வளவு?

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 53 லட்சத்தை தாண்டியதாகவும் அமெரிக்காவில் மட்டும் 16.45 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

உலக அளவில் கொரோனாவின் பாதிப்பு தினமும் லட்சக்கணக்கில் உயர்ந்து வரும் நிலையில் சற்றுமுன் உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின்படி உலகின் முக்கிய நாடுகளில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கையை தற்போது பார்ப்போம்

உலக அளவில் பாதிப்பு: 5,303,715
அமெரிக்கா: 1,645,094
பிரேசில்: 332,382
ரஷ்யா: 326,448
ஸ்பெயின்: 281,904
இங்கிலாந்து: 254,195
இத்தாலி: 228,658
பிரான்ஸ்: 182,219
ஜெர்மனி: 179,713
துருக்கி: 154,500
ஈரான்: 131,652

இந்தியாவில் 124,794 பேர்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 3,726 பேர்கள் கொரோனாவினால் உயிரிழந்துள்ளதாகவும், கொரோனாவில் இருந்து 51,824 குணமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது

Continue Reading

அதிகம் படித்தவை

To Top