Connect with us

முழு ஊரடங்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை: சென்னை காவல்துறையின் அதிர்ச்சி அறிவிப்பு

செய்திகள்

முழு ஊரடங்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை: சென்னை காவல்துறையின் அதிர்ச்சி அறிவிப்பு

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருவதை அடுத்து ஜூன் 19 முதல் ஜூன் 30 வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது

இந்த அறிவிப்பின்படி கடந்த 19ம் தேதி முதல் முழ ஊரடங்கை போலீசார் தீவிரமாக கடைபிடித்தனர். இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன

கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் காவல்துறையினர் இல்லாத இடங்களாக பார்த்து வாகனங்களில் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வந்தது. இதனால் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்

இந்த சோதனையில் சென்னையில் மட்டும் கடந்த நான்கு நாட்களில் ஊரடங்கு விதியை மீறியதாக 16,043 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக சென்னை காவல்துறை அறிவித்துள்ளது. அதேபோல் கடந்த நான்கு நாட்களில் 144 தடை உத்தரவை மீறியதாக 17,865 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்

சென்னையில் நான்கு நாட்களில் 17,865 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டும் 17 ஆயிரத்திற்கும் அதிகமானோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதும் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது

ஊரடங்கு உத்தரவுக்கு சென்னை மக்கள் கட்டுப்படாமல் இருப்பதால்தான் சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்

Continue Reading
To Top