Connect with us

காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தோல்வி: திடுக்கிடும் தகவல்கள்

செய்திகள்

காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தோல்வி: திடுக்கிடும் தகவல்கள்

சமீபத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் வருகை பதிவேடு அடிப்படையில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்க வேண்டும் என தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது

இந்த நிலையில் பத்தாம் வகுப்பு காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு விடைத்தாள்கள் பெற்றோரிடம் ஒப்படைக்கபட்டுள்ளதாகவும் அவை தற்போது பெற்றோர்களிடம் இல்லை என்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்தனர். மேலும் பள்ளிகளில் உள்ள மதிப்பெண் பட்டியலின் அடிப்படையில் மதிப்பெண்களை வழங்க அவர்கள் வலியுறுத்தினர் என்பது குறிக்கத்தக்கது

இந்த நிலையில் திடீரென புதிய சிக்கலாக அரசு பள்ளி ஆசிரியர்கள் திடுக்கிடும் தகவல்களை தெரிவித்து உள்ளனர். அதில் பத்தாம் வகுப்பு காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தோல்வி அடைந்து உள்ளதாகவும் அவர்களுக்கு மதிப்பெண்கள் எப்படி கணக்கிடுவது என்று தெரியவில்லை என்றும் கூறியுள்ளனர்

இதனை அடுத்து பள்ளிக்கல்வித் துறை இதுகுறித்து அறிவுறுத்தல் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது ஏற்கனவே பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்ட நிலையில் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு மதிப்பெண்கள் எப்படி கணக்கிடுவது என்பதில் பெரும் குழப்பம் ஏற்பட்டு உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Continue Reading
To Top