பிக் பாஸ் சாண்டி மீது கடும் கோபத்தில் மோகன் வைத்யா..

பிக்பாஸ் 3 விறுவிறுப்பாக சென்று டிஆர்பியை  எகிற வைத்துக் கொண்டிருந்தது, ஆனால் இந்த வாரம் விறுவிறுப்பு சற்று குறைந்தே காணப்படுகிறது. காரணம் சண்டைகள் பெரிதாக சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை என்பதே காரணமாகும். ஆனால் அந்த எதிர்பார்ப்பினை பிக் பாஸ் சாண்டி இந்த வாரம் நிறைவேற்றியுள்ளார் என்றே கூறலாம்.

 வீட்டில் இந்த வாரம் சண்டைகள் குறைந்து கலகலப்பாக சென்று கொண்டிருக்கிறது. சண்டை போடுவதனையே வழக்கமாகக் கொண்டிருக்கும் வனிதாவிற்கு கொலையாளி டாஸ்க் கொடுக்கப்பட்டதால், சண்டை போட நேரமில்லாமல் சுற்றுகிறார்.

அதனால் மக்களுக்கும் போர் அடித்துவிட்டது,  ஆனால் மற்றொரு புறம் சண்டைக்கு பஞ்சம் இருக்கக்கூடாது என்பதற்காக சாக்ஷி, மீரா, ஆகியோர் ஏதாவது காரணத்திற்காக சண்டை போட்டுக்கொண்டே இருக்கின்றனர்.

மோகன் வைத்தியா வீட்டில் ஆவியாக இருக்கும் சூழ்நிலையில் சாண்டி அவரை கிண்டல் செய்து கொண்டே இருக்கிறார். ஆனால் அதை மோகன் வைத்தியாவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அவர் எல்லை மீறி போவதாக பிக்பாஸிடம் மைக்கில் சொல்லிக்கொண்டே இருக்கிறார். 

எப்போதும் கலகலப்பாக இருக்கும் சாண்டி இப்படி செய்தது மோகன் வைத்யாவை மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளது. மற்ற போட்டியாளர்களுக்கும் இது சற்று அதிர்ச்சியாகவே உள்ளது.