மோகன் வைத்யாவை அழவைத்த கமல் ஹாசன்.. நடந்தது என்ன?

விஜய் தொலைக்காட்சியில் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. மொத்தம் 16 போட்டியாளர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். முதல் வாரத்தில் எலிமினேஷன் இல்லாத நிலையில், 2ஆவது வாரத்தில் முதலில் வீட்டுக்குள் வந்த ஃபாத்திமா பாபு முதலாவதாக வெளியேற்றப்பட்டார். 

சனி, ஞாயிறுகளில் கமல் ஹாசன் திரையில் தோன்றி அந்த வாரத்தில் நடந்த பிரச்னைகளை பேசி பின்னர் அனைவருக்கும் அறிவுரை கூறுவது வழக்கம்.

மோகன் வைத்யாவை அழவைத்த கமல் ஹாசன்.. நடந்தது என்ன?

அவ்வகையில் நேற்று கமல் போட்டியாளர்களை சந்தித்துப் பேசினார். வனிதா- தர்ஷன் சண்டை, லாஸ்லியாவின் மைனம்மா கதை, சாண்டி மற்றும் கவினின் பாடல் என சிறப்பாகவே சென்று கொண்டிருந்தது. வனிதா- தர்ஷன் சண்டை குறித்துக் கூறுகையில், வனிதாவிற்கு அறிவுரை வழங்கியதுடன், தர்ஷனுக்கு ஆதரவும் தெரிவித்தார். பின்னர் லாஸ்லியாவின் கதை குறித்துக் கேட்டு மனம் நெகிழ்ந்து போனார்.

அப்போது இந்த வாரத்தின் எலிமினேஷன் பற்றி கமல் கூறுகையில், மோகன் வைத்யா எலிமினேட் ஆகவுள்ளதாக கமல் ஒரு சிறு நாடகம் செய்தார், கடைசியில் எலிமினேட் ஆகவில்லை என கமல் கூறினார்.