நடிகர் மற்றும் ஆன்மிகவாதி நம்பியார் அவர்களின் 100வது பிறந்த நாள் விழா

எம்.ஜி. ஆருடன் பல படங்களில் நடித்து புகழ்பெற்றவர் எம்.என் நம்பியார். மிக கொடூரமான வில்லனாக படத்தில் நடித்த இவரை ஒரு தலைமுறையின் அப்பாவி ரசிகர்கள் உண்மையான வில்லனாகவே பார்த்தனர்.

298a4f554bc365380a7a215b9464c1ec

வி சேகர் இயக்கிய நீங்களும் ஹீரோதான் என்ற படத்தில் கிராமத்துக்கு ஷூட்டிங் சென்ற நம்பியாருக்கு தண்ணீர் கூட கொடுக்கமாட்டார்கள் அப்படியான ஒரு காமெடி காட்சியமைப்பை அவர் வைத்திருந்தார்.

நம்பியாரின் வில்லத்தனம் அந்த அளவு ஒரிஜினாலிட்டி தன்மையுடன் இருந்ததால் அவர் ஒரிஜினல் வில்லனாகவே பார்க்க துவங்கினர்.

கேரளாவை பூர்விகமாக கொண்டவர் நம்பியார்.

எங்க வீட்டு பிள்ளை, நெஞ்சம் மறப்பதில்லை உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான படங்களில் நடித்த நம்பியார் தமிழ்நாட்டில் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல சினிமா நடிகர்களை சபரிமலைக்கு மாலையிட்டு அழைத்து சென்றுள்ளார்.

நிஜத்தில் நம்பியாரை போல ஒரு சாதுவான மனிதரை பார்ப்பது மிக அரிது.

தமிழ்நாட்டில் சபரிலையின் மகத்துவத்தை பலருக்கு உணர்த்தியதால் இவர் நம்பியார் சுவாமி என்று அழைக்கப்படுகிறார்.

கடந்த 2008ம் ஆண்டு மறைந்த நம்பியாரின் பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...