Connect with us

“நம்ம வீட்டுப் பிள்ளை” படக் குழுவினரை திட்டிய மீரா மிதுன்!!

பொழுதுபோக்கு

“நம்ம வீட்டுப் பிள்ளை” படக் குழுவினரை திட்டிய மீரா மிதுன்!!

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் மாடல் மீரா மிதுன், உள்ளே இருந்தால்தான் பிரச்சினை என்றால், வெளியே போன பின்னாலும் இவர் குறித்த பிரச்சினை ஓய்ந்தபாடிலை.

 ஒவ்வொரு போட்டியாளர்கள் குறித்து சர்ச்சைகளை கிளப்பிய வண்ணமே இருந்த இவர், பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்து வெளியான நம்ம வீட்டுப்பிள்ளை படம் குறித்து பிரச்சினையைக் கிளப்பியுள்ளார் இவர்.

அதாவது இந்தப் படத்தில் மிரா 10 நாட்கள் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்துக் கொடுத்துள்ளார். ஆனால் அவர் நடித்த காட்சிகள் நீக்கப்பட்டது அவருக்கு அதிர்ச்சியாக உள்ளதாக ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.

படப்பிடிப்பில் நான் கடின உழைப்பினைப் போட்டு நடித்துக் கொடுத்தேன், அதை நீங்கள் நீக்கிவிட்டு, வெட்கம் இல்லாமல் எப்படி வெற்றி விழா கொண்டாடுறீர்கள் என்று கேட்டு அனைவரையும் அதிரச் செய்துள்ளார் மீரா.

அதுகுறித்த புகைப்படங்களையும் அதில் அவர் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top