மீனாட்சி அம்மன் கோவிலில் நிவேதா பெத்துராஜ்- சர்ச்சையாகும் விஷயம்

நடிகை நிவேதா பெத்துராஜ் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று வந்தது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றதால் பிரச்சினை இல்லை. அங்கு அவர் செல்ஃபி எடுத்து வெளியிட்டதுதான் பிரச்சினை. சரி செல்ஃபி எடுத்து வெளியிட்டதால் என்ன பிரச்சினை என கேட்பீர்கள்.

இந்தியாவில் குருவாயூர், மதுரை, ராமேஸ்வரம், திருப்பதி, உள்ளிட்ட பல கோவில்களில் உள்ளே செல்ஃபோன் கொண்டு செல்ல அனுமதி கிடையாது. வெளியே கோவில் அலுவலகம் சார்பில் செயல்படும் பாதுகாப்பு மையத்தில் செல்ஃபோனை கொடுத்து டோக்கன் வாங்கி செல்ல வேண்டும்.

அதுதான் மக்கள் அனைவருக்கும் உள்ள விதிமுறை. எல்லோரையும் அப்படி அனுமதிக்கும் கோவில் நிர்வாகம் நிவேதாவை மட்டும் எப்படி செல்ஃபோனோடு அனுமதித்தது. அவர் நடிகை என்றால் அனுமதிக்கலாமா என்பதே மக்கள் கேள்வியாக உள்ளது.