மீடு டுவிட்டை நீக்கிய சித்தார்த்

நடிகர் சித்தார்த் மீடு குற்றச்சாட்டுக்கு எதிராக பல தொடர்ந்து சில நாட்களாக கருத்து தெரிவித்திருக்கிறார்.

நயன் தாராவை அவதூறாக பேசினார் என்று ராதாரவிக்கும் கண்டனத்தை தெரிவித்த சித்தார்த் இது போல் மீடு இயக்கத்திற்கு ஆதரவாக குரல் எழும்பியதுண்டா என்று டுவிட்டரில் கேட்டிருந்தார்.

மீ டூ இயக்கத்தைப் பற்றி எனது துறையின் ஒட்டுமொத்தப் பெண்ணினமும் மவுனம் காத்தபோது எனக்கு அதிர்ச்சியே நிலவியது. தூங்கிக் கொண்டிருப்பவர்களைத் தட்டி எழுப்ப ஒரு சக்தி வாய்ந்த பெண்ணின் கோபத்தால் மட்டுமே இயலும் என்ற உண்மை என்னை வருத்தத்தில் ஆழ்த்தியது.

நீங்கள் பாதிக்கப்பட்டால் மட்டுமே தான் அநியாயத்துக்காக குரல் கொடுப்பீர்கள் என்றால் அது துணிச்சலே அல்ல. பாதுகாப்பற்ற உணர்வால் பலம் பொருந்திய பெண்கள்கூட மீ டூ பற்றி பேசாமல் இருந்தீர்கள் என்றால் நீங்களும் குற்றவாளிகள்தான் என சித்தார்த் கூறி இருந்தார்.

இதற்கு மறைமுகமாக பதிலளித்த விக்னேஷ் சிவன்

மீ டூ உலகம் முழுவதும் வலிமையான, முக்கியமான இயக்கம். பல துறைகளை, முக்கியமாக பொழுதுபோக்குத் துறையை உலுக்கிய இயக்கம். ஒருவர் சமூக வலைதளத்தில் அமைதியாக இருக்கிறார் என்பதால் அவர் ஒரு பிரச்சினைக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்று அர்த்தமல்ல.

பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கு நயன்தாரா என்றுமே குரல் கொடுத்துள்ளார். பெண்களுக்கு பாதுகாப்பான, சவுகரியமான பணிச்சூழல் இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை வெளிப்படையாக தனது திரைப்படங்களில் ஆதரித்துப் பேசியுள்ளார். அதன் தாக்கம் ட்விட்டரை விட அதிகம்.

பல பெண்களுக்கு தார்மீக ஆதரவும், பண உதவியும் செய்துள்ளார். மீ டூ இயக்கத்தில் இடம்பெற்ற பாதிக்கப்பட்ட பெண்களை தனது படங்களில், தன் நிஜ வாழ்க்கையில் பணியமர்த்தியுள்ளார். ஆனால் இவற்றையெல்லாம் சமூக ஊடகங்களில் அவர் சொல்லவில்லை. ஒரு பெண்ணுக்கு எதிராக அவ்வளவு எளிதாக இழி கருத்துகளை பேசியிருக்கிறார் என்ற பிரச்சினையைக் கொண்டு வரும்போது, அந்தப் பிரச்சினையைப் பார்க்காமல் சிறுபிள்ளைத்தனமான குற்றச்சாட்டுகளை முன் வைக்கின்றனர். என கூறி இருக்கிறார்.

பின்பு சித்தார்த் அந்த டுவிட்டை நீக்கி விட்டது குறிப்பிடத்தக்கது.