அஞ்சலியின் லிசா ரிலீஸ் தேதி

ஒரு காலத்தில் தமிழ் திரைப்பட உலகையே அதிர வைத்த படம் மை டியர் லிசா. தமிழ் திரைப்படம் என்று சொல்வதை மலையாள திரைப்பட உலகை என்று சொன்னால்தான் சரியாக இருக்கும், மலையாள மொழிமாற்று படம்தான் மை டியர் லிசா. இது பயங்கர அச்சத்தை வர வைத்த படமாகும்.

பல வருட இடைவேளைக்கு பிறகு லிசா என்ற பெயரில் ஒரு படம் வருகிறது. பலூன் என்ற பேய்ப்படத்தில் நடித்த பிறகு அஞ்சலி நடித்திருக்கும் இப்படம் வரும் மே 24ல் வெளிவருகிறது.

சாம் ஜோன் என்பவர் நடித்து இருக்கிறார். சும்மா மிரட்டு மிரட்டுன்னு அஞ்சலி இப்படத்தில் நடித்துள்ளாராம்.

ராஜு விஸ்வநாத் இப்படத்தை இயக்கியுள்ளார்.