படப்பிடிப்பு முடியும் முன்னரே ரூ100 கோடி லாபம் பெற்ற மாஸ்டர் தயாரிப்பாளர்

df8f7292778acfa2b3cb4dcdf0864838

விஜய் நடித்து வரும் மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடியும் முன்னரே இந்த படத்தின் மொத்த வியாபாரமும் முடிவடைந்து தயாரிப்பதற்கு ரூபாய் 100 கோடி லாபம் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை லலித் என்பவர் பெற்றுள்ளார் என்பது தெரிந்ததே. அதேபோல் கேரளா கர்நாடகா ஆந்திரா மாநிலங்களில் உரிமைகளின் வியாபாரமும் விறுவிறுப்பாக முடிவடைந்துவிட்டது

மேலும் சன்டிவி சாட்டிலைட் உரிமையையும் அமேசான் நிறுவனம் டிஜிட்டல் உரிமம் பெற்றுள்ள நிலையில் தற்போது வெளிநாட்டு ரிலீஸ் உரிமையையும் விற்பனையாகி விட்டது

இந்த படத்தின் பட்ஜெட் சுமார் 150 கோடி என்ற நிலையில் இப்போது 250 கோடிக்கு இந்தப் படம் வியாபாரம் ஆகிவிட்டது என்றும் எனவே தயாரிப்பாளருக்கு படப்பிடிப்பு முடியும் முன்னரே ரூபாய் 100 கோடி ரூபாய் லாபம் கிடைத்து விட்டதாகவும் கூறப்படுகிறது

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...