Connect with us

நீல நிறத்தில் காட்சியளித்த மெரினா கடல் அலைகள்

செய்திகள்

நீல நிறத்தில் காட்சியளித்த மெரினா கடல் அலைகள்

இந்தியாவில் மிகப்பெரிய கடல்களில் ஒன்று மெரினா கடற்கரை. மெரினா கடற்கரை 13 கிலோமீட்டர் நீளமுடையது. இது சென்னையின் ஓர் அடையாளமாக காணப்படுகிறது. மெரினா கடற்கரையில் தலைவர்களின் நினைவிடங்கள் உள்ளதால் மெரினா முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றாக காட்சியளிக்கிறது.

கிழக்கு கடற்கரையான திருவான்மியூர், நீலாங்கரை, ஈச்சப்பாக்கம் போன்ற இடங்களில் நேற்று இரவு மெரினா கடற்கரையில் அலைகள் நீலநிறமாக காட்சியளித்தன.

இதனையடுத்து பொதுமக்கள், பெண்கள், இளைஞர்கள் என அனைவரும் மெரினா கடற்கரையில் குவிந்தனர். அலைகள் நீல நிறத்தில் ஜொலித்தன. அதனைக் காண திரண்ட மக்கள் ஏராளம்.

சல்லிக் கட்டு போரட்டத்தை தொடர்ந்து மெரினா கடற்கரையில் கூட்டம் கூடுவதற்கு தடை தெரிவிக்கப்பட்டுள்ள நிலையிலும் அலைகள் நீல நிறத்தில் ஜொலிப்பதை காண வந்த கூட்டம் அதிகமாக இருந்தது.

இவ்வாறு அலைகள் நீல நிறத்தில் ஜொலிப்பதற்கான காரணத்தை அப்பகுதி மக்களிடம் கேட்டப்போது இது ஒருவகையான கடற்பாசி என்றும் இதற்கு பெயர் ஜல்லி எனவும் கூறினர்.

கடல் அலை நிறம் மாறி இருப்பதை பொதுமக்கள் புகைப்படம் எடுத்து கண்டுகளித்தனர். இதனை இளைஞர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top