மார்கழி மாதத்தில் வாசலில் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

0e87531ae1cbe658ec4dd0fa6bd6a011

முன்பெல்லாம், கல்யாண புரோக்கர்கள்,  மேட்ரிமோனியல் தளங்கள், திருமண தகவல் அமைப்புலாம் கிடையாது. ஒரு வீட்டில் பெண்ணோ இல்லன்னா பிள்ளையோ திருமணத்துக்குத் தயாராக இருந்தா, அந்த வீட்டின் வாசலில் மட்டும்தான் கோலத்தின்மேல் பூசணிப் பூ வைப்பார்கள். ஒட்டுமொத்தமா எல்லா வீடுகளிலும் வைக்க மாட்டார்கள். மார்கழி மாத அதிகாலையில் பஜனைப்பாடல் பாடிக்கிட்டு வர்றவங்க பார்வையில் இந்த பூசணிப்பூ தென்பட்டு, தகவல் அறிந்து, விசாரித்து, பேசி தைமாதம் கல்யாணத்தை முடிப்பார்கள். அதனாலதான் தைப்பிறந்தால் வழிப்பிறக்கும்ன்னு சொல் வந்தது. பூசணிப்பூ வைக்க இன்னொரு காரணம், இப்பூக்களிலிருந்து வரும் வாசம் பனிக்காற்றில் கலந்து கிருமிகளை கொல்லும் என்பதாலும்தான்.

af0e1041f8336b686273242e3b834be7

அதேப்போல், வயதுவந்த பெண்கள் வீட்டைவிட்டு வெளியில் வரமாட்டாங்க. அதனால், அதிகாலையில் எழுந்து வாசலில் இளம்பெண்கள் கோலம் போடுவதும், கோவிலுக்கும் செல்ல சொல்வதும், பெண்களை ஆண்கள் பார்த்து, பெண்பிடித்து போய் சம்பந்தம் செய்யனுமென்றுதான் இப்படியொரு நியதி. வாசலில் பெண்கள் கோலம்போடும் அதேநேரத்தில் ஆண்கள் பஜனைப்பாடல்களைப் பாடியபடி வீதிகளில் வந்து பஜனையை கோவிலில் முடிப்பார்கள். இந்த நியதியும் திருமணத்துக்கு ஏற்பாடு செய்யவே உண்டானது.. இப்பொழுது இந்த வழக்கமெல்லாம் காணாமல் போச்சு!!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews