மறந்தும் மைக்ரோவேவ் அடுப்பில் இதையெல்லாம் செய்துடாதீங்க!

e500f699f37d2a12319c08e6b5df65e6

மைக்ரோவேவ் அடுப்பு மெல்ல மெல்ல இந்திய அடுப்பங்கரைக்குள் நுழைய ஆரம்பித்து இன்று சிறுசிறு நகரங்களுக்கும், நடுத்தர  மக்களின் பயன்பாட்டுக்கும் வர ஆரம்பித்துவிட்டது. இந்த அடுப்பில் சமைப்பது எப்படின்னு எல்லாரும் சொல்லி தருவாங்க. ஆனா, என்னெல்லாம் செய்யக்கூடாதுன்னு சொல்லித்தரமாட்டாங்க. அதைதான் இன்று பார்க்கப்போறோம்.

1.மைக்ரோவேவ் அடுப்பில் உணவு சமைக்கும்போது அடிக்கடி திறந்து மூடக்கூடாது.

2.குறுகிய வாயுள்ள பாத்திரத்தைப் பயன்படுத்தக் கூடாது.

3. முட்டையை ஓட்டுடன் வைக்கக்கூடாது.

4.வறுவல் செய்யும்போது உப்பு போடக்கூடாது, ஏனெனில் அப்படிச் சமைத்தால் உப்பு தீய்ந்து அதிலிருக்கும் ஐயோடின் சிதைந்து போய்விடும். எனவே, வறுத்த பின்பு உப்பு சேர்க்க வேண்டும்.

5.பிளாஸ்டிக் மற்றும் காகிதப் பொருட்களைப் பயன்படுத்தக்கூடாது. பயன்படுத்தினால் அவை உருகி, எரிந்து போய்விடும்.

6.தண்ணீரைச் சுட வைக்க மைக்ரோவேவ் அடுப்பைப் பயன்படுத்தக்கூடாது. ஏனெனில் இதன் நுண் கதிர்களால் தண்ணீரின் மூலக்கூறுகள் அசைக்கப்பட்டுத்தான் தண்ணீர் சூடாகும். அதனால் நீராவி வெளியேறாது. தண்ணீர் அதன் கொதி நிலையான 100 டிகிரி செல்ஸியஸ் அளவையும் தாண்டி சூடாகும். ஆனால், தண்ணீர் கொதிப்பில் சலனம் எதுவும் இருக்காது. இது தெரியாமல் அடுப்பை அணைத்ததும் உள்ளிருந்து நீரை அஜாக்கிரதையாக எடுத்தால் தப்பித் தவறி தண்ணீர் உடம்பில் பட்டுத் தீக்காயம் ஏற்படும்.

இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு மைக்ரோவேவ் அடுப்பில் சமைத்து அசத்துங்க

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.