மண்பானையில் பொங்கல் வைப்பது ஏன்?!


de3c986003dbe6e8072eeb0900797b49-2

இன்றைக்கு காலமாற்றத்தினாலும், சொகுசா வாழ பழகிட்டதாலும், பழமையை மறந்ததாலும் குக்கர் பொங்கலுக்கு மாறிட்டோம். ஆனா, மண்பானையில்தான் பொங்கல் வைக்கவேண்டும். அதுக்கு காரணமுமிருக்கு.

நாம் வாழும் இந்த பூமியானது ஆகாயம், காற்று, நீர் , நெருப்பு, நிலம் ஆகிய பஞ்சபூதங்களால் ஆனது. நமது உடலும் கண்,காது, மூக்கு, மெய், வாய் எனப்படும் பஞ்சபூதங்களால் ஆன சேர்க்கையே. நாம் உண்ணும் உணவும் பஞ்சபூதங்களால் ஆனதே. நிலத்தில் விளைந்த தானியத்தை ஆகாயத்தின்கீழ் நீரோடு சேர்த்து, நெருப்பின் உதவியால் வேக வைக்க, காற்றை உள்வாங்கி நாம் உண்ணும் பொருளாய் மாறுகிறது.

இவை மட்டுமல்ல, நாம் உபயோகப்படுத்தும் அனைத்து பொருட்களுமே பஞ்சபூதங்களின் சேர்க்கையே! இந்த வாழ்வியல் தத்துவத்தை நமக்கு உணர்த்தவே, நிலத்தில் இருக்கும் மண்ணை கொண்டு, நீர் சேர்த்து, பக்குவமாய் பானை செய்து, ஆகாயத்தின்கீழ் வெட்டவெளியில் காயவைத்து நெருப்பின் உதவியோடு சுட்டெடுத்தால் அழகிய பானையாக உருவெடுக்கும். பஞ்சபூதங்கள் சரிவிகிதத்தில் ஒன்று சேர்ந்தால் அழகிய, அனைவருக்கும் உதவக்கூடிய, ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிக்காத பொருளாய் மாறும். இதுப்போல மனிதனும் தனது ஐம்புலன்களை சரிவிகிதமாய் நல்லவிதத்தில் பயன்படுத்தினால் வாழ்க்கை அழகானதாகவும், அர்த்தமுள்ளதாகவும் மாறும் என்பதை உணர்த்தவே மண்பானையில் பொங்கல் இடுவது வழக்கம்.

பொங்கல் பொங்கும் நேரம்நோய் இல்லா வாழ்வும்…நிறைந்த செல்வமும் எல்லார்வாழ்விலும் குறைவில்லாமல் கிடைத்து அன்புடனும், நேசத்துடன் வாழ வழி கிடைக்கட்டும்.சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...