லிடியனை பாராட்டிய மனோபாலா

சமீபத்தில் உலக சாதனை படைத்த தமிழ் சிறுவன் லிடியன். அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சியில் 13 வயதில் அனைத்து இசைக்கருவிகளையும் சாதாரணமாக மிக இனிமையாக இசைக்கும் வல்லமை பெற்றதால் லிடியனுக்கு 1 மில்லியன் டாலர் இந்திய மதிப்பில் 7 கோடி ரூபாய் பரிசாக பெற்றார்.

லிடியனின் அப்பா வர்ஷனும் ஒரு இசையமைப்பாளர்தான். முன்னாள் முதல்வர் ஜெ மரணத்தின்போது அவர் இறுதி அஞ்சலியின்போது வந்த பாடல்கள் வர்ஷன் இசையமைத்ததே.

லிடியனின் அக்கா அமிர்தவர்ஷினியும் சிறந்த இசைக்கலைஞர். புல்லாங்குழலை இனிமையாக வாசிப்பவர் இவர்.

இவர்களை இளையராஜாவில் இருந்து இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் வரை பலரும் பாராட்டியுள்ளனர்.

இவர்களைது இசை வீடியோக்களும் லிடியன் நாதஸ்வரம் என்ற பெயரில் யூ டியூப்பில் பிரபலமாகும்.

இந்நிலையில் விருது வென்ற சிறுவன் லிடியனை நடிகரும் இயக்குனருமான மனோபாலாவும் நேரில் சென்று பாராட்டினார்.