Connect with us

திடீரென கவிழும் நிலையில் பாஜக அரசு: அதிர்ச்சி தகவல்

செய்திகள்

திடீரென கவிழும் நிலையில் பாஜக அரசு: அதிர்ச்சி தகவல்

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி இரண்டாவது முறையாக அமைக்கப்பட்ட பின்னர் பல மாநிலங்களில் பாஜக ஆட்சி ஏற்பட்டது என்பது தெரிந்ததே. அவ்வாறு பாஜக ஆட்சி செய்து வரும் மாநிலங்களின் ஒன்று மணிப்பூர்.

இந்த மாநிலத்தில் திடீரென பாஜகவுக்கு ஆதரவு கொடுத்து வந்த 9 எம்.எல்.ஏக்கள் ஆதரவை விலக்கிக் கொண்டதால் தற்போது அம்மாநிலத்தில் பாஜக ஆட்சி கவிழும் நிலையில் உள்ளது

கடந்த 2017 ஆம் ஆண்டு மணிப்பூர் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றபோது பாஜக 21 இடங்களிலும் காங்கிரஸ் 28 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால் சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் ஆதரவுடன் அம்மாநிலத்தின் பாஜக ஆட்சி அமைத்தது

இந்த நிலையில் திடீர் திருப்பமாக பாஜகவுக்கு ஆதரவு கொடுத்த சுயேட்சைகள் மற்றும் சிறிய கட்சி எம்எல்ஏக்கள் 9 பேர் திடீரென ஆதரவை விலக்கிக் கொள்வதாக அறிவித்துள்ளனர். மேலும் அவர்கள் காங்கிரசுக்கு ஆதரவு கொடுக்கப் போவதாகவும் அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இந்த நிலையில் 9 எம்எல்ஏக்களின் விலகல் காரணமாக மணிப்பூர் மாநிலத்தில் பாஜக அரசு கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது இதனை அடுத்து பாஜக தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி வருவதால் விரைவில் அம்மாநில சட்டப்பேரவை கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Continue Reading
To Top