மாண்டியா தொகுதியில் போட்டியிடும் முன்னாள் நடிகை

தமிழில் ப்ரியா உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் கன்னட நடிகர் அம்பரீஷ். இவர் கடந்த வருடம் மறைந்தார். இவரது மனைவி சுமலதா. சுமலதாவும் தமிழில் முரட்டுக்காளை, கரையெல்லாம் செண்பகப்பூ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

கன்னட நடிகையான நடிகர் அம்பரீஷை திருமணம் செய்து கொண்டார்.

அம்பரீஷ் மறைவுக்கு பின்னர் வரும் மக்களவை தேர்தலில் சுமலதாவை போட்டியிட சொல்ல அம்பரீஷின் ஆதரவாளர்கள் கூறுகிறார்களாம்.

அம்பரீஷ் கடைசி வரை காங்கி ரஸ் கட்சியில் இருந்ததால், நானும் காங்கிரஸ் சார்பிலே மக்களவைத் தேர்தலில் மண்டியா வில் போட்டியிடுவேன். ஒரு வேளை காங்கிரஸ் ‘சீட்’ வழங்காவிட்டால், சுயேச்சை யாக போட்டியிடுவேன். ஒரு வேளை இந்த தொகுதி கூட்டணிக் கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு தரப்பட்டால் அந்த வேட்பாளரை எதிர்த்து போட்டி யிடுவேன் என்றார்.