மாமனிதன் படப்பிடிப்பு நிறைவு

விஜய் சேதுபதியை தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் தமிழில் அறிமுகப்படுத்தியவர் சீனு ராமசாமி. விஜய் சேதுபதியுடன் தொடர்ந்து தர்மதுரை உள்ளிட்ட படங்களில் இருவரும் பணியாற்றியுள்ளனர்.

இந்நிலையில் மாமனிதன் என்ற படத்தில் விஜய் சேதுபதி நடித்து வந்தார்.இந்த படத்தின் பெரும்பான்மையான காட்சிகள் கேரளாவில் படமாக்கப்பட்டது.

இந்த படத்துக்கு வித்தியாசமாக தமிழ் சினிமா வரலாற்றில் இளையராஜாவும், யுவன் ஷங்கர் ராஜாவும் சேர்ந்து இசையமைத்துள்ளனர்.

படப்பிடிப்பு இனிதே நிறைவடைந்தது, யுவனும் இசைஞானி இளையராஜாவும் சேர்ந்து தரும் இசைக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம் என பட இயக்குனர் சீனு ராமசாமி கூறியுள்ளார்.