சோழ இளவரசியாக மாறிய மாளவிகா மோகனன்: அசரவைக்கும் போட்டோ ஷூட்

தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் நாயகியாக நடித்துள்ள மாளவிகா மோகனனுக்கு அந்த படம் வெளியாகும் முன்னரே என்று ரசிகர்கள் குவிந்துள்ளனர்

அவ்வப்போது அவர் தனது சமூக வலைத்தளத்தில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து இளசுகளை சூடு ஏற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த புகைப்படங்கள் காரணமாக அவருக்கு ஒரு சில சினிமா வாய்ப்புகள் கிடைத்துள்ளது. பாலிவுட்டில் ஒரு சூப்பர் ஆக்சன் படத்திலும், தனுஷ் நடிக்கவிருக்கும் அடுத்த படத்திலும் மாளவிகா மோகனன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் சோழநாட்டு இளவரசி தோற்றத்தில் போட்டோ ஷூட் எடுத்த புகைப்படங்களை மாளவிகா மோகனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்

அதேபோல் பழங்குடியின பெண்ணின் தோற்றத்திலும் சில புகைப்படங்களை பதிவு செய்து உள்ளார். இந்த இரண்டு தோற்றங்களிலும் மாளவிகா மோகனன் இளவரசி போலவும் தேவதை போலவும் அசத்தலாக இருப்பதாகவும் ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது