Connect with us

பாலிவுட்டை அடுத்து ஹாலிவுட் செல்லும் மாளவிகா மோகனன்: சம்பளம் ரூ.50 கோடியா?

பொழுதுபோக்கு

பாலிவுட்டை அடுத்து ஹாலிவுட் செல்லும் மாளவிகா மோகனன்: சம்பளம் ரூ.50 கோடியா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ’பேட்ட’ என்ற திரைப்படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் நடித்தவர் நடிகை மாளவிகா மோகனன். அதன் பின் திடீரென தளபதி விஜய் நடித்த மாஸ்டர்’ திரைப்படத்தில் நாயகியாக நடித்தால் தமிழகம் முழுவதும் புகழ் பெற்றார். இந்த படம் அவருக்கு மிகப்பெரிய எதிர்காலத்தைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

‘மாஸ்டர்’ திரைப்படம் ரிலீஸ் ஆனால் கோலிவுட் திரையுலகில் மட்டுமின்றி தென்னிந்திய திரை உலகிலும் மாளவிகா மோகனனுக்கு வாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் அவர் ஒரு பாலிவுட் ஆக்சன் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும் இந்த படத்திற்காக அவருக்கு ரூபாய் 5 கோடி சம்பளம் பேசப்பட்டு தாகவும் கூறப்பட்டது

ஒரே ஒரு படத்தில் மட்டுமே நாயகியாக நடித்த மாளவிகா மோகனனுக்கு நயன்தாராவை விட அதிக சம்பளமா? என்று கோலிவுட்டில் ஆச்சரியம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஹாலிவுட்டில் தயாராகும் வெப்சீரிஸ் ஒன்றில் நடிக்க மாளவிகா மோகனன் இடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகக் இந்த வெப்சீரிஸில் மாளவிகா மோகனன் தேர்வு செய்யப்பட்டால் அவருக்கு சுமார் 50 கோடி வரை சம்பளம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது

இந்த தகவல்கள் விரைவில் உறுதி செய்யப்படும் என்று கூறப்படுவதால் மாளவிகா மோகனனின்அபார வளர்ச்சியை பார்த்து கோலிவுட் திரையுலகம் மட்டுமின்றி இந்திய திரையுலகமே ஆச்சரியத்தில் வாயைப் பிளந்து இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது

Continue Reading
To Top