மஹிமா நம்பியார் சர்ச்சை போஸ்டர்

விஜய் சிகரெட் பிடித்த சர்கார் பட போஸ்டருக்கு என்னென்ன பிரச்சினைகள் வந்தது என்று தெரியும் அதே போல் ஹன்சிகா நடித்த படத்துக்கும் சிகரெட் பிடித்த புகைப்படம் வந்ததால் பிரச்சினைகள் எழுந்தது.

இப்பிரச்சினைகள் எல்லாம் ஓய்ந்த நிலையில் சிறிது கால இடைவெளிக்கு பிறகு மஹிமா நம்பியார் நடிக்கும் அசுர குரு படத்தின் ஒரு ஸ்டில் வந்துள்ளது. மஹிமா நம்பியார் சாட்டை படத்தில் அறிமுகமானவர்.

அசுர குரு படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடிக்கும் இவர் சிகரெட் பிடிப்பது போல் நடித்திருப்பது அடுத்த சர்ச்சைக்கு வழிவகுத்திருக்கிறது.