இந்திய அழகியை கை பிடிக்கும் மகத்

சிம்புவின் வல்லவன் உள்ளிட்ட படங்களிலும் காளை உள்ளிட்ட படங்களிலும் நடித்தவர் மகத். சிம்புவின் நெருங்கிய நண்பரான இவர் அஜீத் நடித்த மங்காத்தாவிலும் நடித்திருந்தார்.

மகத் சில படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். இவர் நீண்ட நாட்களாக இந்திய அழகி பட்டம் பெற்ற பிராச்சி மிஸ்ராவை காதலித்து வருகிறார்.

இவர்கள் காதல் முறிந்ததாகவும் செய்திகள் நடு நடுவில் அடிபட்டது. மகத் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் அதிக கவனம் பெற்றார்.

இந்நிலையில் பிராச்சி மிஸ்ராவுடன் சமீபத்தில் நிச்சயதார்த்தம் ஆனதை தனது தளங்களில் வெளியிட்டு உள்ளார் மகத்.