Connect with us

10ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி குறித்து தமிழக முதல்வரின் முக்கிய அறிவிப்பு

செய்திகள்

10ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி குறித்து தமிழக முதல்வரின் முக்கிய அறிவிப்பு

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு படித்து வரும் அனைவரும் பாஸ் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்து உள்ளது என்பதும் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு மதிப்பெண்கள் மற்றும் வருகை தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளில் படித்து வரும் த்தாம் வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்

குறிப்பாக நாம் தமிழர் கட்சியின் சீமான், பாமக நிறுவனர் ராமதாஸ், இயக்குனர் பா ரஞ்சித் உள்பட பலர் இந்த கோரிக்கையை வைத்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது மராட்டிய மாநிலத்தில் தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி அளிக்கப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவித்துள்ளார் இந்த அறிவிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

முதல்வரின் இந்த அறிவிப்புக்கு பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் தனது டுவிட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது: மராட்டிய மாநிலத்தில் தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி அளிக்கப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருப்பது பாராட்டத்தக்கது. பா.ம.க. கோரிக்கைக்கு வெற்றி; முதலமைச்சருக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.

Continue Reading
To Top