Connect with us

மகரம் ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2019!

ராசி பலன்

மகரம் ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2019!

இந்த 2019 வருடம் 6-3-2019-ம் தேதி அன்று  ராகு மிதுனத்திற்கு மாறுகிறார். ஜென்மத்தில் இருந்த கேது விலகி உங்களது பன்னிரெண்டாம் வீடான தனுசு ராசியில் சஞ்சாரம் செய்கின்றார். இதுவரை ஏழாம் இடத்தில் இருக்கின்ற ராகுவும், ஜென்மத்தில் இருக்கின்ற கேதுவும் காரியத் தடைகள், வீண் விரயங்கள், தீயோர் சேர்க்கை, உடல் உபாதைகள், அவப்பெயர், தேவையற்ற வம்பு, விரோதங்களை கொடுத்து வந்தார். இனி உங்களது நிலை மாறும். பொதுவாக 3,6,11-ம் இடங்களில் ராகு, கேது போன்ற சர்ப்ப கிரகங்கள் சஞ்சாரம் செய்யும் பொழுது நன்மை செய்ய கடமைப்பட்டு இருக்கின்றார்கள். ஆறாம் இடத்தில் இருக்கின்ற ராகுவும், 12-ம் இடத்தில் இருக்கின்ற கேதுவும் என்ன பலன்களை வழங்க போகின்றார்கள் என்பதை விரிவாக காணலாம்.

Magaram ragu kethu peyarchi 2019

பொதுவான பலன்கள்:

ஆறாம் இடத்தில் இருக்கின்ற ராகுவால் பல்வேறு முன்னேற்றங்கள் அடைவீர்கள். தாரளமான பணவரவு உண்டாகும். தொல்லை கொடுத்து வந்த எதிரிகளை இனம் கண்டு விலகி விடுவீர்கள். இதன் காரணமாக கூட உங்களுக்கு நல்ல வருமானம் வரக்கூடும். குரு பகவான் அதிசாரமாக தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யும் பொழுது சுப விரயங்களை கொடுப்பார். சிலருக்கு குருவால் வீண் அலைச்சலும் ஏற்படக்கூடும்.

பன்னிரெண்டாம் இடத்தில் கேது பகவான் உங்கள் ராசிநாதனோடு தனுசு ராசியில் சஞ்சரிப்பதால் விரயங்கள் ஏற்படக்கூடும். அது வீண் விரயங்களாக இருக்காது, அது சுப விரயமாக தான் ஏற்படக்கூடும். வீடு, மனை வாங்குவது, கட்டுவது போன்றவை நடைபெறக்கூடும். கோயில் திருப்பணிகளுக்கு நன்கொடை கொடுப்பீர்கள். இல்லத்தில் இருப்பவர்களுடன் புனித ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள்.

அக்டோபர் மாதத்திற்கு பிறகு குரு சாதகமற்ற நிலையில் இருப்பதால் மனதில் இனம் புரியாத பயம், அச்சம், தேவையற்ற சிந்தனைகள் வரக்கூடும். இதுவரை உங்களது பிள்ளைகள் வழியில் இருந்த பிரச்சனைகள் ஒரு முடிவுக்கு வரக்கூடும். உற்றார், உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியாக காணப்படுவீர்கள். விருந்து, விழாக்களில் கலந்து கொள்வீர்கள். ஏழரைச் சனி ஆதிக்கம் இருப்பதால் எதையும் நாளைக்கு என்று தள்ளி போடாமல் தீவிரமாக பேசி முடிப்பதே நன்மை தரும்.

உத்தியோகஸ்தர்களுக்கு :

பணியிடத்தில் உங்களது ஆற்றல் மேம்படும். பணியிடத்தில் சீரான வளர்ச்சி இருக்கக்கூடும். வேலை விஷயமாக வெளியூர் அல்லது வெளிமாநிலம் செல்ல நேரிடும். பாதுகாப்பு துறையில் இருக்கின்றவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உங்களது திறமைகள் பளிச்சிடும். மேலதிகாரியிடம் பாராட்டும் பெறுவீர்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். பணியிடத்தில் இருந்த மறைமுக எதிரிகள் விலகி உங்களிடம் சரணடையும் நிலை உருவாகும்.

வியாபாரம்/தொழில் பிரிவினர்கள்:

வியாபாரம், தொழில் செய்கின்றவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் வரக்கூடும். இதுவரை யார் நல்லவர், கெட்டவர் என்பதை அறியாத நீங்கள், இனி அவர்களை இனம் கண்டு விலகிவிடுவீர்கள். புதிய தொழில், வியாபாரம் தொடங்க, விரிவாக்கம் செய்ய  ஏற்ற காலமாக இருக்கின்றது.

மாணவ – மாணவியர்கள்:

மாணவர்கள் விரும்பிய பாடப் பிரிவு கிடைக்கும். சிலரின் சேர்க்கையால் உங்கள் மீது அவப்பெயர் மற்றும் வீண் பழி சுமத்தப்பட்டதே, இனி அது விலகும். ஆசிரியர்களின் அறிவுரையை கேட்டு நடந்து கொள்ளுங்கள்.

குடும்பம்:

குடும்பத்தில் குதூகலமாக காணப்படுவீர்கள். திருமணம் ஆகாத மகரம் ராசியினருக்கு நல்ல வரன் அமையக்கூடும். குழந்தை பாக்கியம் எதிர்பார்த்து கொண்டு இருப்பவர்களுக்கு நல்ல மழலைச் செல்வம் கிட்டும். அவ்வப்பொழுது ஏதோ இனம் புரியாத பயம் வந்து நீங்கும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு பக்க பலமாக இருப்பார்கள். குறிப்பாக சகோதரிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். பிள்ளைகளால் பெருமை உண்டு.

உடல்நலம்:

மயக்கம், பித்தம், வயிறு சம்மந்தமான உபாதைகள் வரக்கூடும். உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள்.

வணங்க வேண்டிய தெய்வம்:

கேது பகவான் உங்களது 12-ம் வீட்டில் இருப்பதால் குலதெய்வ பிரார்த்தனைகளை செய்யுங்கள். இஷ்டதெய்வத்தை வணங்கி வாருங்கள். மேலும் உங்களது சங்கடங்களை எல்லாம் விலக, சங்கடஹர சதுர்த்தி அன்று பிள்ளையாரை மனதார வணங்கி வாருங்கள்.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top